தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி: பஞ்சாங்க தகவலால் பரபரப்பு

Sinhala and Tamil New Year
By Fathima Apr 15, 2026 05:05 AM GMT
Report

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு நாளன்று பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம்.

நேற்றும் சாமி சன்னதி முதல் பிரகாரத்தில் சோமாஸ்கந்தர் சன்னதி எதிரே பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

சிறப்பு பூஜைகள் நடைபெற்று பங்ஞசாங்கத்தை வாசிக்கத் தொடங்கினார் உதயகுமார்.

அதில், இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க போட்டியிடும், பல கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும், எதிர்கட்சிகளுக்கு ராஜயோகம் தான்.

ஆளுங்கட்சி மூத்த தலைவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரிவுகளை சந்திக்க வேண்டி இருக்கும், அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது, மத்தியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் முக்கிய பதவி வகிப்பார்.

இத்தகவல்கள் உட்பட இன்னும் பல விபரங்கள் வாசிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி: பஞ்சாங்க தகவலால் பரபரப்பு | Tamil Panchangam About Election 2026