தமிழக பெண்களிடம் உள்ள தங்கம் மட்டும் இத்தனை டன்களா? அடேங்கப்பா!
தங்கம் விலை எவ்வளவு கூடினாலும், நகைகள் விற்பனை குறையவில்லை என்று நகை வியாபாரிகள் சொல்கிறார்கள்.
தங்கம் விலை
ஜெர்மனி, இத்தாலி மற்றும் ரஷ்யாவில் கையிருப்பில் உள்ள தங்கத்தை விட நம் தமிழ்நாட்டு மக்களிடம் இருக்கும் தங்கத்தில் அளவானது அதிகமாகும்.உலக தங்க கவுன்சில் கணக்கீட்டின் படி, தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் 6,720 டன் தங்கம் உள்ளது.

இது அமெரிக்கா நாட்டில் கையிருப்பில் இருக்கும் தங்கத்திற்கு சமம். அமெரிக்காவில் 8,133.46 டன் தங்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது,
தமிழ்நாடு
"தங்க நகைகள் சேமிப்பது தமிழர்களின் பாரம்பரியமாக இருக்கிறது. சிலர் இதனை வருமானமாக பார்ப்பதைவிட செல்வமாக கருதுகின்றனர். வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் தங்கம் விலையானது 150 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டுதோறும் 8 முதல் 10 சதவீதம் விலை அதிகரித்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.