தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும் - ஜே.பி.நட்டா நம்பிக்கை
தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும் என ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம்
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 10 பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.
பின்னர் கட்சியினர் மத்தியில் பேசிய ஜே.பி.நட்டா, மாநில கட்சிகள் எல்லாம் குடும்ப கட்சிகளாக உள்ளன. மேலும் பேசிய அவர், திமுகவில் வாரிசு அரசியல் நடைபெற்று வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதே போன்று ஜம்மு காஷ்மீர், பீகார், தெலங்கானாவில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது என்றார்.தமிழகத்தில் விரைவில் பாஜகவினரின் கடுமையான உழைப்பால் தாமரை மலர போகிறது.
பாஜகவினர் நம்பிக்கை உடன் பணியாற்றினால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று அவர் கட்சியினர் மத்தியில் உரையாற்றினார்.