தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை வரலாம்! மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

oxygen cylinder
By Fathima Apr 22, 2021 05:27 AM GMT
Report

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது.

கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் கொரோனா அறிகுறிகளுடன் சாலையில் படுத்துக்கிடக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே அவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவைப்படும், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறக்கும் அவலநிலையும் உள்ளது.

நம் மக்கள் இறந்து கொண்டிருக்கும் வேளையில், மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஆக்சிஜனை ஏற்றுமதி செய்வதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வடமாநிலங்களை போன்று தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

2வது அலை ஜீலை மாதத்தில் உச்சமடையும் வேளையில், தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.