தமிழகத்தில் மழை குறையுமா? சென்னைக்கு என்ன நிலை - வெதர்மேன் அப்டேட்!
நாளை முதல் மழை முழுவதுமாக குறைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெதர் அப்டேட்
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வருகிறது. சாத்தூர் அணை, தென்பெண்ணை ஆறு, பூண்டி ஏரி உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் சென்னைக்கு பெய்ய வேண்டிய மழை இதுவே கடைசியாக இருக்க வாய்ப்புகள் உண்டு. இன்று இரவு மற்றும் நாளை முதல் மழையானது ஒட்டுமொத்தமாக குறைந்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எங்கெல்லாம் மழை?
மேலும், கிழக்கு கடற்கரைச் சாலையை நோக்கி மேகக் கூட்டங்கள் நகர்கின்றன. எனவே, சிறுச்சேரி- மாம்பாக்கம்- தாம்பரம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யவும், டிச., 17 வரை மிதமான மழை தொடரும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.