மீண்டும் தமிழகத்தில் கன மழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் வரும் 21, 22ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 48 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறியுள்ளது,
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும், நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

வரும் 21ம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே நாளில் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூரில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.