கொளுத்தும் வெயிலை தணிக்க வருகிறது மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. !

Chennai India
By Anbu Selvam Mar 28, 2023 12:44 PM GMT
Report

அடுத்து வரும் 5 நாட்களுக்கான வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை மையம் .

வானிலை அறிவிப்பு

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிய வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பொழிவிற்கான முன்னறிவிப்பை அறிவித்துள்ளது வானிலை மையம் .

அடுத்த மூன்று மணிநேரத்திற்கான மழை முன்னறிவிப்பையும் வெளியிட்டுள்ளது .அதன்படி வடமாவட்டங்களான வேலூர் ,கிருஷ்ணகிரி ,திருவண்ணாமலை ,சேலம் ,கள்ளக்குறிச்சி ,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் திருச்சி ,கோயம்புத்தூர் ,தென்காசி , கன்னியாகுமரி உள்பட 15 மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

29.03.2023 முதல் 01.04.2023 வரை தமிழ்நாடு ,காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது .என தெரிவித்துள்ளது .

கொளுத்தும் வெயிலை தணிக்க வருகிறது மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. ! | Tamil Nadu Weather Forecast

வெப்ப நிலை நிலவரம்

அதிகபட்ச வெப்ப நிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் . கடலோர மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் தெரிவிக்கப்படவில்லை . என்பதனால் மீனவர்கள் அச்சப்பட வேண்டாம் .