Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

Tamil nadu Department of Meteorology
By Vinoja Jul 05, 2026 08:37 AM GMT
Report

சென்னையைப் பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

[OOLE9L ]

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு 

வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா ,மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

இது அடுத்த மூன்று நாட்களில் மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஸ்கர் பகுதிகளை அடையக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு | Tamil Nadu Today Meteorological Department Report

இதன் தாக்கத்தால் இன்று முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து, வெப்பநிலை சுமார் 98 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.