15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

tnrains tnweather
By Swetha Subash Apr 17, 2022 12:05 PM GMT
Report

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்ககாக கோடை மலை பெய்து வருகிறது. இந்த நிலையில், வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி மற்றும் தென்காசி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.