கொரோனா பரவலில் தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சுகாதார அமைச்சகம்

covid19 india tamilnadu
By Irumporai May 11, 2021 11:33 AM GMT
Report

கொரோனா பரவலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொர்றின் இரண்டாம் அலையால் நாடு முழுவதும் நாள்தோறும் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி:

நாட்டில் 13 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கு அதிகமானோரும், 6 மாநிலங்களில் 50,000லிருந்து ஒரு லட்சம் பேரும் மற்றும் 17 மாநிலங்கள்ல் 50,000க்கு குறைவாகவும் கொரோனாசிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில்,கர்நாடகம், கேரளம், தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப், அசாம், ஹிமாச்சல், புதுவை, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, நகலாந்து, அருணாச்சல பிரதேசம், ஜம்மு- காஷ்மீர் மற்றும் கோவா மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, டெல்லி, ஹரியாணா, சட்டீஸ்கர், பிகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பரவலில் கர்நாடகம், கேரளத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.