கொஞ்சம் பேச்சை குறைச்சிட்டு செயலில் காட்டுவோம் : பருவநிலை மாநாட்டில் தமிழக மாணவி அசத்தல்

tamilnadu vinishaumashankar cop26
By Irumporai Nov 03, 2021 10:38 PM GMT
Report

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது மக்கள் கோபமும், விரக்தியும் அடைந்துள்ளதாக பருவநிலை மாநாட்டில் தமிழக மாணவி வினிஷா உமாசங்கர் பேசியுள்ளார்.

ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாநாடு நடந்தது. இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்பட பல நாட்டு தலைவர்கள் பங்கேற்று பேசினர்.

இந்நிலையில் இந்த மாநாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி வினிஷா உமாசங்கர் கலந்து கொண்டார். இவர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சோலாரில் இயங்கும் இஸ்திரி வண்டியை உருவாக்கியவர்.

கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாநாட்டில் பேசிய வினிஷா:

: பேசுவதை குறைத்துக் கொண்டு, செயலில் ஈடுபட வேண்டும்.எனக் கூறினார், மேலும் பழைய விவாதம் குறித்து சிந்திப்பதை நிறுத்திக் கொண்டு எதிர்காலத்துக்கான புதிய பார்வையோடு அணுக வேண்டும் என பேசினார்.

மேலும் இளைய தலைமுறையினரான எங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க சர்வதேச நிறுவனங்கள், உலக தலைவர்கள், சமூகத்தினர், தொழில் அமைப்பின் தலைவர்கள் ஆகியோர் உங்கள் நேரம், பணம், முயற்சியை எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

எங்களுடன் நீங்கள் சேர்ந்தாலும், நீங்கள் இல்லாவிட்டாலும் நாங்களே வழிநடத்துவோம். தாமதித்தாலும் நடவடிக்கை எடுப்போம். எதிர்காலத்தை உருவாக்குவோம் என்று கூறிய மாணவி வினிஷா உமாசங்கர்/

தயவு செய்து இளைய தலைமுறையின்  அழைப்பை ஏற்றுகொண்டு வாருங்கள். நான் இந்திய பெண் மட்டுமல்ல. பூமியை சேர்ந்த பெண். அப்படி இருப்பதில் பெருமை அடைகிறேன். இவ்வாறு வினிஷா பேசினார்.