டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: வரும் மாதம் முதல் அமல்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் மாதம் முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வரும் என்றும், ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ. வசதியும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

அரசுக்கு ரூ.110.74 கோடி கூடுதல் செலவு
இந்த ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.110.74 கோடி கூடுதல் செலவாகும். உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.14,340-ல் இருந்து ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.15,530-ல் இருந்து ரூ.19,413 ஆகவும், மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.17,850-ல் இருந்து ரூ.22,313 ஆகவும் உயர்கிறது.
மேலும், எம்.ஆர்.பி. விலையை விட அதிகமாக மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டாஸ்மாக் பார்களின் டெண்டர் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பப்களில் 21 வயதுக்குட்பட்டவர்களை அனுமதித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், மின்சாரக் கட்டணத்தை விரைவில் ஒழுங்குமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan