நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
நீட் தேர்விற்கு தமிழ்நாடு மாணவர்கள் தயாராவதில் தவறு இல்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு என மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அம்மா பூங்காவில் முன் களப்பணியாளர்கள் ஆன தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு, இருந்தபோதும் மாணவர்களுக்கு நீட் தேர்வால் சிறிதளவேனும் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நீட் பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
கடந்த ஆட்சியின்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் உயர்கல்வி தொடர்வதற்காக கொண்டுவரப்பட்ட நுழைவுத் தேர்வை தவிர்ப்பதற்காக திமுக அரசு குழு அமைத்து நுழைவுத்தேர்வு வராமல் தடுத்தது.
அதேபோல் தற்பொழுதும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீட்டல் தேர்விலிருந்து விலக்கு பெறுவது பெரிய சட்டப்போராட்டம் என்பதினால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் எந்த தவறும் இல்லை என