பங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்

By Irumporai Aug 11, 2022 11:39 AM GMT
Report

ஜம்மு காஷ்மீர் அருகே ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த 3 பேரில் ஒருவர் மதுரையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

தற்கொலை படை தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராஜௌரி மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்நிலையில் எல்லையில் ஊடுருவி ராணுவ முகாமிற்குள் திடீரென புகுந்த 2 பயங்கரவாதிகள், முகாமில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயன்றனர்.

பங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம் | Tamil Nadu Soldier Martyred In Terrorist Attack

அப்போது அங்கிருந்த ராணுவ வீரர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், பதிலுக்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

தமிழகத்தை சேர்ந்த வீரர் மரணம்

இதேபோல் அந்த இரண்டு பயங்கரவாதிகளுகு சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு ராணுவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம் | Tamil Nadu Soldier Martyred In Terrorist Attack

இந்நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் மதுரையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மணன் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தது தெரியவந்துள்ளது. இதேபோல் மற்ற இருவரும், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என ராணுவம் அறிவித்துள்ளது.