பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொரு முறை நிரூபித்துள்ளது : ஜோதிமணி எம்பி

tamilnadu bjp tweet jyotimanimp
By Irumporai Jan 09, 2022 10:32 AM GMT
Report

நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில், நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட 13 பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய முதலமைச்சர், நீட் விலக்கு பெரும் சட்ட முன்வடிவு கடந்த செப் 13ம் தேதி சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக சார்பில் பங்கேற்ற கோவை தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,. நீட் தேர்வால் இட ஒதுக்கீடு எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை, சமூக நீதிக்கு எள் முனையளவுக்கும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இந்தநிலையில், தமிழக மண்ணில் ஒருபோதும் தமிழர் விரோத பாஜக வேறூன்ற அனுமதிக்கக்கூடாது” என்று காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,

நீட்டுக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நிற்கும்போது பாஜக மட்டும் நீட் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழக மண்ணில் ஒருபோதும் தமிழர் விரோத பாஜக வேறூன்ற அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.