140 படுக்கைகளுடன் கொரோனா சித்த மருத்துவமனை சென்னையில் ரெடி - தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

tamilnadu siddha 140beds chifminister
By Irumporai May 11, 2021 01:06 PM GMT
Report

140 படுக்கைகளுடன் கொரோனா சித்த மருத்துவமனையினை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சென்னையில் திறந்து வைத்தார் .

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவேகமாக அதிகரித்து வருகிறது.கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை இல்லாத நிலை உள்ளது .

 சமீபத்தில் கொரோனா வைரசிற்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கத்தில் 140 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஒன்று கடந்த சில நாட்களாக அமைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த பணி முழுமை அடைந்துள்ளது.

140 படுக்கைகளுடன் கொரோனா சித்த மருத்துவமனை சென்னையில் ரெடி - தமிழக முதல்வர் திறந்து வைத்தார். | Tamil Nadu Siddha Hospital Chennai 140 Beds

இதனையடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 140 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

இதில் 70 சித்த மருத்துவ படுக்கைகளும் 70 அலோபதி மருத்துவ படுக்கைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.