இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 9.25 சதவீதமாக உள்ளது - அமைச்சர் பேட்டி

Government of Tamil Nadu
4 நாட்கள் முன்

இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு  9.25 சதவீதமாக உள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல், பேக்கிங் செய்தல், உணவு தொழில்நுட்பம் தொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை  ஃபுட் புரோ என்ற கண்காட்சியை நடத்தி வருகிறது.

14வது கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இந்த கண்காட்சியின் கருத்தரங்கு கூட்டத்தில் அமைச்சர்கள் தா. மோ. அன்பரசன், எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் பங்களிப்பு 9.25 % 

தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், இந்தியாவில் உள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களில் 15 சதவீதம் தமிழகத்தில் உள்ளது.

T. M. Anbarasan

இதனால் எம்.எஸ்.எம்.இ. துறையில் தமிழகம் இந்திய அளவில் 3வது இடத்தில் உள்ளது. ஏ. எஸ்.ஐ. அறிக்கையின் படி உணவு பதப்படுத்துதல் துறையில் தமிழ்நாடு ரூ. 85 ஆயிரத்து 825 கோடி உற்பத்தி செய்து 5வது இடத்தில் உள்ளது.

உணவு பதப்படுத்தும் தொழிலில் மட்டும்  MSME துறையின் மூலம் 784 புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

உணவு பதப்படுத்தும் தொழில்களை ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த நிதியாண்டில் 227 உணவு பதப்படுத்தபடும் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 28 கோடியே 18 லட்சம் முதலீடு மானியத்துடன் ரூ. 112 கோடியே 72 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அறிவுரை 

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு  9.25 % ஆக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூதுகையில், உழவர் சந்தைகளை உலக சந்தைகளாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

M. R. K. Panneerselvam

அந்த அறிவிப்புக்கு இணங்க கருத்தரங்கம் பயன் தரும். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை அதன் மதிப்பை உயர்த்தி விற்றால் தான் பயன் பெற முடியும். அதன் அடிப்படையில் பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறோம்.

மதுரையில் முருங்கையை பதப்படுத்தி அதை மதிப்புக் கூட்டி விற்பதற்காக முயற்சிகள் நடந்து வருகிறது. உணவு வீனாகாமல் தடுக்க கோல்ட் ஸ்டோரேஜ் உருவாக்க பட்டு வருகிறது.இந்த ஆண்டு கூடுதலாக 14 உழவர் சந்தைகள் உருவாக்கி தரப்பட்டுள்ளது.

விவசாயிகள் கேட்கும் இடங்களில் எல்லாம் விளைவித்த பொருட்களை பாதுகாப்பாக வைக்க கிடங்குகள் உருவாக்கி தரப்பட்டு வருகிறது.

கொள்முதல் செய்யப்படும் நெல் மழையில் நனையாதவாறு உடனடியாக கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களை பாதுகாக்க அதிக கிடங்குகள் அமைக்கப்படவில்லை.

கடந்த ஆட்சி காலத்தில் தேவையான கிடங்ககுகள் அமைக்கப்படாத காரணத்தினாலும் கடந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்ததாலும் முதலமைச்சர் வேளாண் துறை, உணவு வழங்கல் துறை அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து உடனடியாக கொள் முதல் செய்யப்பட்ட நெல்களை பாதுகாப்பான இடங்களை வைக்க ஏற்பாடு செய்தார்.

இதன் படி ஒரு வார காலத்திற்குள் கொள்முதல் செய்யப்பட்ட உணவு பொருட்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டது என்று கூறினார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.