தவிக்கும் கேரள மக்கள்..உதவத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்!
வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ள தமிழ்நாடு குழுவினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாடு குழு
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 298 பேர் உயிரிழந்துள்ளனர்.000'திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்கள் . இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . பலரும் தங்களது உதவி கரத்தை வயநாட்டு மக்களுக்கு நீட்டியுள்ளார்கள்.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ள தமிழ்நாடு குழுவினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பிறகு அவர் வெளியிட்டுள்ள பதிவில்,'' நிவாரணப் பணிகளுக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ள நமது இரண்டு IAS அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் முழு முனைப்புடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணி
அவர்களது பணிகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, தவிக்கும் கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கூறும்படி அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
#WayanadLandslide நிவாரணப் பணிகளுக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ள நமது இரண்டு IAS அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் முழு முனைப்புடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
— M.K.Stalin (@mkstalin) August 2, 2024
அவர்களது பணிகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, தவிக்கும் கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவத்… pic.twitter.com/fqCccOjdBN