ரேசன் கடைக்கு செல்லும் போது கையில் பணம் எடுத்துச் செல்லத் தேவையில்லை - தமிழக அரசு அதிரடி

Government of Tamil Nadu
By Thahir Sep 02, 2022 11:27 AM GMT
Report

ரேசன் கடைகளில் G-Pay, Paytm, போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ரேசன் கடைகளில் யூபிஐ ( UPI) வசதி

ரேசன் கடைகளில் யூபிஐ ( UPI) வசதி பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் (G-Pay, Paytm) போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரேசன் கடைக்கு செல்லும் போது கையில் பணம் எடுத்துச் செல்லத் தேவையில்லை - தமிழக அரசு அதிரடி | Tamil Nadu Ration Shop Bill Pay With Gpay Paytm

முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ரேசன் கடைகளில் மாதிரி ரேசன் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படிப்படியாக அனைத்து ரேசன் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், ரேசன் கடைகளில் 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.