ரயில் பயணிகளின் டிக்கெட்டில் தடுப்பூசி எண் அச்சிடப்படும் - தென்னக ரயில்வே புதிய அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஒரு வாரத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் புறநகர் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2 டோஸ் செலுத்தியதற்கான கொரோனா சான்றிதழ் அவசியம். முகக் கவசம் அணியாவிடில் அபராதம் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது சீசன் டிக்கெட்டில் தடுப்பூசி எண் அச்சிடப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை புறநகர் ரயில் பயணிகளின் மாதாந்திர சீசன் டிக்கெட்டில் இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் எண் அச்சிடப்படும்.
பயணிகள் ஆதார் எண், சீசன் டிக்கெட், கொரோனா தடுப்பூசி சான்றிதழை காட்டி புதிய சீசன் டிக்கெட் பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.