தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு
tamilnadu
school opening
By Fathima
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
- அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி மற்றும் கைகழுவ தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
- கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது.
- மாணவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையானவை வழங்க வேண்டும்.
- கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியான மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
- ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
- பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகம் அல்லது உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.
- பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேண்டீன், கழிவறைகள், அனைத்து வகுப்பறைகள், நூலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.
- பள்ளி வாகனங்களை கிளம்புவதற்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
- பள்ளிகளில் ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே குறைந்தது 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
- ஆசிரியர்கள் அறை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- பள்ளியின் கழிவறைக்கு வெளியே, கைக்கழுவுமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி வட்டம் போடப்பட்டிருக்க வேண்டும்.
- பள்ளிகளில் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.