தற்போது ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகமாகி விட்டது : ஆளுநர் தமிழிசை
ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகமாகிவிட்டதாக ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
தமிழக பொங்கல்
சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஆளுநர் தமிழிசை பொங்கல் கொண்டாடினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இன்று கொண்டாடப்படும் பொங்கல் தமிழக, தமிழ்நாடு பொங்கல் என தெரிவித்துள்ளார்.
ஆளுநர்களை வம்பு இழுப்பது
அரசியல் தலைவர்கள் வரம்பு மீறி பேசக்கூடாது. தமிழ்நாடும் வேண்டும் தமிழகமும் வேண்டும். ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகமாகிவிட்டது.
முதலமைச்சர் ஆளுநரை விமர்சிக்க வேண்டாம் என கூறியும், தமிழக ஆளுநரை இணையதளங்களில் தவறாக விமர்சனம் செய்து வருகின்றனர் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும் நாகரிகத்தோடு வரம்பு மீறாமல் விமர்சனம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.