தமிழக அரசியலின் இரு துருவங்கள் : விமர்சனங்களை கடந்த சாதனை
கருணாநிதி என்ற பெயரைக் கேட்கும்போது ஜெயலலிதாவும், ஜெயலலிதா என்ற பெயரை உச்சரிக்கும்போது கருணாநிதியும் தமிழர்களின் நினைவுக்கு வருவது தற்செயல் நிகழ்வல்ல.
கருணாநிதி ஜெயலலிதா
கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழகத்தின் , அரசியலைத் தீர்மானிக்கும் இவர்கள், முக்கிய துருவங்களாக இருந்தனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை இவர்களின் ஆட்சியில் தமிழ்நாட்டில் முக்கிய திருப்பங்கள் நடந்தன என்பதை மறுக்க முடியாது.
வெற்றிகளைக் கண்ட அளவுக்கு ஈடாக எதிர்ப்புகளையும், துரோகங்களையும், அவதூறுகளையும், பழிசொற்களையும் எதிர்கொண்டவர் கலைஞர்.
அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொண்டதுபோலவே, இயக்கத்தின் முன்னோடிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி, விவாதம்செய்து முடிவெடுக்கும் வழக்கத்தைக்கொண்டிருந்த ஜனநாயகப் பண்பு கலைஞரிடம் இருந்தது. அது, அவரின் வெற்றிக்குக் காரணம் என்றே கூறலாம்.
ஜெயலலிதா அரசியல்
ஜெயலலிதாவின் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால் 8முக்கிய சம்பவங்கள் அவரது வாழ்க்கையையே முற்றிலுமாக புரட்டிப் போட்டன. அதில் குறிப்பிடத்தக்கவை, அவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்தது. எம்ஜிஆருடனான சந்திப்பு, கருணாநிதியுடனான முதல் சட்டசபை மோதல் போன்றவை. எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி அம்மையாருடன் ஏற்பட்ட மோதலில், அதிமுகவின் இரட்டைஇலைச் சின்னத்தைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. 1988ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 27 சட்டமன்ற உறுப்பினர்களுடன் அதிமுக எதிர்க்கட்சியாக, வீற்றிருக்க, தமிழகச் சட்டமன்றத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவியாக ஜெயலலிதா அதிமுகவை வழிநடத்தினார்.
1989ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார் ஜெயலலிதா. 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி, தமிழகச் சட்டமன்றத்தில் நடந்த அமளியில் ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதாகவும், உடல் ரீதியாகத் தாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. தலைவிரி கோலமாக, கிழிந்த சேலையுடன் ஜெயலலிதா சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்த அந்தச் சம்பவத்தின் காட்சிகள் தமிழக மக்களிடையே குறிப்பாகத் தமிழ்நாட்டுப் பெண் வாக்காளர்களிடையே ஜெயலலிதாவுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியது.
திராவிட இயக்கமானது, இடஒதுக்கீடு கொள்கை, பெண் சமத்துவம், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றம், கல்வி, வேலை வாய்ப்புகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு உள்ளிட்ட உயர் நெறிகளை நீதிக்கட்சி காலத்தில் இருந்து பின்பற்றி, டாக்டர் நடேசனார், சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் போன்ற பல பெரும் தலைவர்களை உருவாக்கியது. தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டார்.
1944ல் திராவிடர் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி அறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற இளம் தலைவர்களை உருவாக்கி, திராவிடர் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தார் பெரியார். 95 வயதுவரை வாழ்ந்து ஒரு மாபெரும் சமூகப் புரட்சியாளராகப் பெரியார் மறைந்தார்
தமிழக வளர்ச்சி
இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.
நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்தது சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெறவைத்தது.
அதே போல் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய அரசியல் வரலாற்றிலும் தனித்துவமான தடங்களை பதித்துச்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெரும்பாண்மையாக ஆண்களே கோலோச்சுகிற தமிழக அரசியலில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக வெற்றிக்கொடி நாட்டியவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா திட்டங்கள்
தமிழக அரசியலில் ஜெயலலிதா 16 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். அவர் முதலமைச்சாராக இருந்த கால கட்டத்தில் பல மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதே போல, இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியான பல மக்கள் நலத் திட்டங்களை கொண்டுவந்தார். தொட்டில் குழந்தை திட்டம்,அனைத்து மகளிர் காவல் நிலையம் அறிமுகம்,மழைநீர் சேகரிப்புத் திட்டம்,கள்ளச் சாராயம் ஒழிப்பு,லாட்டரி சீட்டு தடை,நில அபகரிப்புச் சட்டம்,அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிகணினி திட்டம் போன்றவை முக்கியமானவை ஆகும்
தமிழக அரசியல் வரலாற்றில் கருணாநிதி ஜெயலலிதா இவர்களின் மீது சில விமர்சனங்கள் முன் வைத்தாலும் தமிழகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தனர் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.