தமிழக காவல் துறை எச்சரிக்கை: இனி அதிரடி தான்

covid19 action tamilnadupolice
By Irumporai May 13, 2021 06:31 PM GMT
Report

தற்போது கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி எடுக்கிறது. இதனால், பலரும் உயிருக்குப் போராடி அன்றாடம் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.

பிணத்தை எரிக்கவோ மருத்துவமனைகளில் படுக்கைக்கோ இடம் கிடைக்காமல் மக்கள் அன்றாடம் அல்லாடி வரும் நிலையும், உள்ளது.

இந்த நிலையில், தற்போது தமிழக காவல் துறை சார்பில் ஊரடங்கை மீறி வாகனத்தில் வருபவர்கள் மீதும், வெளியே நடமாடுபவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்.

நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்றும், ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.