நடிகை யாஷிகா கலந்து கொண்ட பேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்த போலீசார் - 5 பேர் பணியிடமாற்றம்
நடிகை யாஷிகா கலந்து கொண்ட பேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்த 5 போலீசாரை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பேஷன் ஷோ
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில், தனியார் அமைப்பு சார்பில் பேஷன் ஷோ நடந்தது. இந்த பேஷன் ஷோவிற்கு நடிகை யாஷிகா ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ராம்ப் வாக்
இந்த பேஷன் ஷோவில், சிறுவர், சிறுமியர் உட்பட பெண்கள் பலர் கலந்து கொண்டு ராம்ப் வாக் சென்றனர்.
அப்போது, இந்நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளரும், 4 போலீசாரும் பேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்தனர்.

பணியிட மாற்றம்
இதனையடுத்து, பேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 4 போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராம்ப் வாக் செய்த 5 பேரை, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.