தமிழகத்தில் இன்று +2 பொதுத்தேர்வுகள் தொடக்கம்
2025- 26 ம் ஆண்டிற்காக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகிறது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்.6 வரை நடைபெற உள்ளது.
3,412 தேர்வு மையங்களில், பள்ளி மாணவர்கள் 7,99,692 பேரும், தனித்தேர்வர்கள் 27,783 என மொத்தம் 8,27,475 தேர்வர்கள் எழுதவுள்ளனர்.
49,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளராகவும், 4900க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அமைச்சரின் எக்ஸ் தள பதிவு
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று பொதுத்தேர்வு எழுதவுள்ள 12ம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும், அன்பு மாணவர்களே பதற்றம் இல்லாமல் Exam Hallக்கு வாங்க, மகிழ்ச்சியாக நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள், உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
