அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்பட்டது
india
tamilnadu
palanisami
By Jon
தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் விவாததின் போது அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்பட்டது.
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: * தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும். * 2021 மே 31ந்தேதிக்குள் ஓய்வு பெறும் அனைவருக்கும் புதிய ஓய்வு வயது வரம்பு பொருந்தும்.
* தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும் நிலையில் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.