வடமாநிலத்தவர் தமிழகம் வருவது போர் தொடுப்பது தான் : சீமான் கருத்து
BJP
Seeman
By Irumporai
கடலில் பேனா நினைவு சின்னம் வைக்க நடவடிக்கை எடுத்தால் நான் போராட்டத்தை தொடங்குவேன் என்று நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் கூறியுள்ளார்.
வட மாநிலத்தவர் வருகை
வட மாநிலத்தவர் தமிழகம் வருவது ஒரு வித போர் தொடுப்பது தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், 5 ஆண்டுகளில் 11/2 கோடி வடமாநிலத்தவர்கள் வந்துள்ளனர்.
பாஜக பின்புலம்
இதற்கு பாஜக பின்புலம் உள்ளது என்றார். மேலும், கடலில் பேனா நினைவு சின்னம் வைக்க நடவடிக்கை எடுத்தால் நான் போராட்டத்தை தொடங்குவேன் என்றும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.20 அயிரம் இழப்பீடு மிகவும் குறைவானது எனவும் தெரிவித்தார்.