தமிழ்நாடு : பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது.
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் கவுன்சிலராக பதவியேற்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
அதன்படி பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரம் :
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவராக புவனேஷ்வரி தேர்வானார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் முத்துக்குமார் தேர்வு.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சித் தலைவராக விசிக உறுப்பினர் அமுதலட்சுமியைப் போட்டியின்றித் தேர்வு.
கன்னியாகுமரி மாவட்டம் விலவூர் பேரூராட்சி தலைவராக சுயேச்சை வேட்பாளர் பில்கான், கோதநல்லூர் பேரூராட்சி தலைவராக திமுகவின் கிறிஸ்டல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குமாரபுரம் பேரூராட்சி தலைவராக காங்கிரஸ் வேட்பாளர் ஜான் கிறிஸ்டோர், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவராக திமுகவின் ஹாரூன் ஆகியோர் தேர்வு.
தர்மபுரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சி தலைவராக அதிமுகவின் தேவராஜ் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
பொள்ளாச்சி நகராட்சியில் திமுக வேட்பாளர் ஷாமிலா நவநீத கிருஷ்ணன் போட்டியின்றி தலைவராகத் தேர்வு.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி தலைவராக திமுகவின் சண்முகப்பிரியா செந்தில்குமார் தேர்வாகியுள்ளார்.
மணப்பாறை நகராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுகவின் சுதா பாஸ்கரன் வெற்றி.