நாடாளுமன்ற வளாகத்தில் : நிதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக எம்.பி க்கள்

Budget 2023
By Irumporai Feb 01, 2023 09:43 AM GMT
Report

நாடாளுமன்ற வளாகத்தில் எய்ம்ஸ் என எழுதிய செங்கலுடன் தமிழக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்ஜெட்

நாடாளுமன்றத்தில் இன்று 2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த நிலையில், மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் : நிதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக எம்.பி க்கள் | Tamil Nadu Mps Protested

தமிழக எம்.பிக்கள் போராட்டம்

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எய்ம்ஸ் என எழுதிய செங்கலுடன் தமிழக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என குற்றசாட்டியுள்ளனர்.