புது தமிழ்நாடு மாடல் வாஷிங்மெஷின் குட்கா கரைகளைக் கூட நீக்குமாமே?- கனிமொழி விமர்சனம்
பாஜக பயன்படுத்தி வந்ததை போன்ற வாஷிங்மெஷின் ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று திமுக எம்பி கனிமொழி பதிவு வெளியிட்டுள்ளார்.
தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்
அதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் இணைந்தனர்.
மேலும், அவர்களின் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேரும் தவெகவில் இணைந்து உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.
இந்நிலையில், இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவு
வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற 'வாஷிங்மெஷின்' ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கரைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே... உண்மையா? என்று விமர்சித்துள்ளார்.
வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற 'வாஷிங்மெஷின்' ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கரைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே... உண்மையா?
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 2, 2026