தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்?
உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவை விரிவாக்கம்
அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம்? என்றால் யார் யாருக்கு எந்தெந்த துறை வழங்க வாய்ப்பு என்பதை பார்க்கலாம் அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் உள்ள கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன் பெரியகருப்பனுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்.
தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள மெய்யநாதனுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அளிக்கப்பட உள்ளதாக தகவல்.
கூட்டுறவுத்துறை அமைச்சராக உள்ள ஐ. பொியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை வழங்கப்பட உள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள மதிவேந்தனுக்கு வனத்துறை வழங்கப்பட உள்ளது.
தற்போது வனத்துறை அமைச்சராக உள்ள ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்