தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலியா போலீஸ்
ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர் முகமது ரஹ்மத்துல்லா சையது அகமது என்பவரை போலீசார் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழர் மீது துப்பாக்கிச்சூடு
ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா சையது அகமது. இவர் கடந்த செவ்வாய்கிழமை சிட்னி நகரில் உள்ள ஆபர்ன் ரயில் நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்த துாய்மை பணியாளரை கத்தியால் தாக்கியதாக அந்நாட்டு போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

பின்னர் போலீசாரை நோக்கி வேகமான நடந்து வந்த நிலையில் அவர் போலீசார் மீது தாக்குதல் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் 3 முறை போலீசார் அவரை நோக்கி சுட்டத்தில் முகமது ரஹ்மத்துல்லா சையது அகமது நெஞ்சில் 2 குண்டு பாய்ந்து அங்கே சுருண்டு விழுந்தார்.
போலீசார் சுட்டதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் உயிரிழப்பு
இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி இந்திய துாதரம் ஆஸ்திரேலியா போலீசாரிடம் விளக்கம் கேட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த நபரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.