எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி.. டோக்கியோ ஒலிம்பிக்கில் கால்பதிக்கும் தமிழக சிங்கப்பெண்கள்!
விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் ஒரு பாடல் வரி ஒன்று ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறுஉன்னை பெண்ணென்றுகேலி செய்த கூட்டம் ஒருநாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு.
இது தற்போது பெண்மையினை போற்றும் வகையில் அமைந்த திரைப்பாடல்களில் மிகவும் புகழ் பெற்றது
அந்த வகையில் இன்று உலகையே தன் பார்க்க வைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி .
யார் இந்த ரேவதி:
மதுரை, சக்கிமங்கலத்தைச் சேர்ந்த ரேவதி, சிறு வயதிலயே பெற்றோரை இழந்தவர். ஏழ்மையான நிலையில் பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார்.
பள்ளியில் படிக்கும்போது ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் ஏற்பட்டு அதில் பயிற்சி பெற ஆரம்பித்து போட்டிகளில் முதலிடம் பெறத் தொடங்கினார்.
அதை தொடர்ந்து மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்றார்.
ப்ளஸ் டூவுக்குப் பிறகு அரசு விளையாட்டு விடுதியில் தங்கிப் படித்தார் ரேவதி. ஏழ்மையான குடும்பச் சூழ்நிலை என்பதால் பயிற்சிக்குத் தேவையான பொருள்கள் வாங்க முடியாத நிலையிலும், தடகளப் பயிற்சியாளர் கண்ணனின் வழிகாட்டலும் ரேவதி தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெற்று பல போட்டிகளில் முதலிடத்தை பெற்று வந்தார்.
கடந்த ஆண்டு முதல், டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஒரே இலக்கில் கடுமையான பயிற்சிகளை எடுத்து வந்தார் ரேவதி.அந்தக் கடின உழைப்புக்கு இப்போது பலன் கிடைத்துவிட்டது.
தங்க மங்கை தனலெட்சுமி:
திருச்சியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் தனலெட்சுமி, ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் இம்மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ளத் தேர்வாகியுள்ளார்.
திருச்சி விமான நிலையம் அருகே குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவரின் இளம்பருவத்திலேயே தந்தை இறந்துவிட்டார்.
தாயான உஷாவின் பராமரிப்பிலேயே வளர்ந்துவந்திருக்கிறார். இவருக்கு இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.
தாயாரின் ஆதரவுடன் வளர்ந்த இவர் இவர் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படிக்கும்போதே பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பதக்கங்களை அள்ளியிருக்கிறார்.
தேசிய அளவிலான போட்டியில் தனி சாதனை படைத்து சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்கவும் தகுதி பெற்றுள்ளார்.
பாட்டியாலாவில் மார்ச் 15ஆம் தேதி நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் பங்கேற்ற தனலட்சுமி 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார். 100 மீ தூரத்தை 11.38 வினாடிகளில் கடந்தார்.
இதன்மூலம் சர்வதேச வீராங்கனைகளான டூட்டி சந்த், ஹீமா தாஸ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தார்.
இதுமட்டுமில்லாமல் 1998ஆம் ஆண்டு பி.டி.உஷா நிகழ்த்திய முறியடிக்க முடியாத சாதனையான 23.30 வினாடி என்ற சாதனையையும் முறியடித்திருக்கிறார் தங்கமங்கை தனலட்சுமி.
திருச்சியைச் சேர்ந்த வீராங்கனை தனலட்சுமி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒலிம்பிக்கில். பதக்கங்கள் பெற்று இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமைப்படுத்துவேன் என கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோ பதிவில் தமிழக அரசு தனக்கு ஒரு வேலை வழங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறியுள்ளார்.