தமிழகத்திற்கு கருப்பு மாதமா டிசம்பர்..?? தொடரும் தலைவர்களின் மரணம்
இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணமடைந்தது முன்னதாக டிசம்பர் மாதத்தில் பல அரசியல் தலைவர்களைத் தமிழகம் இழந்துள்ளது.
பெரியார்
தந்தை பெரியார் என்றாலே சாதி ஒலிப்பு போராளி, சுயமரியாதைக்காரர், பெண்ணியவாதி, கடவுள் மறுப்பாளர் என்ப பல வழிகளில் இயங்கியவர்.
இவர் 1989ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவர் தனது 94 வயதில் 1973 டிசம்பர் 24, இயற்கை எய்தினார். பெரியார் மறைந்தாலும் அவரின் கருத்துக்கள் மறையாமல் தமிழகத்தில் நிலைத்திருக்கிறது.
எம்.ஜி.ஆர்
நடிப்பின் மூலம் பல நல்ல கருத்துக்களை மக்களிடையே கொண்டு சென்றவர் எம்.ஜி.ஆர். பள்ளி குழந்தைகளின் பசியாற்றிய பெருமை இவரையே சாரும்.
பிரச்சாரத்திற்கே வராமல் முதலமைச்சரான ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். இவர் தனது 70 வயதில் 1987 டிசம்பர் 24, இயற்கை எய்தினார்.
ஜெயலலிதா
எம்.ஜி.ஆருடன் அதிக திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர் ஜெயலலிதா.எம்.ஜி.ஆர் மூலம் அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்குப் பல நன்மைகள் செய்துள்ளார் ஜெயலலிதா.
இன்றளவும் அதிமுகவின் வாக்கு ஈர்ப்பாக நிலைத்து நிற்கும் இவர் தனது 68 வயதில் 2016 டிசம்பர் 5, இயற்கை எய்தினார்.
விஜயகாந்த்
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று இயற்கை எய்தினார். இவர் 25 ஆகஸ்ட் 1952-ல் பிறந்தார். தனது 71 வயதில் 2023 டிசம்பர் 28, இயற்கை எய்தினார்.
தேமுதிக கட்சியின் தலைவராக மட்டுமின்றி இன்றளவும் நடிகராக, நல்ல மனிதராக தொடர்ந்து நீடித்து வந்த விஜயகாந்த்தின் மறைவும் இதே டிசம்பர் மாதத்தில் நடைபெற்றதுள்ளது வேதனையை அளித்துள்ளது.