காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
காலை சிற்றுண்டி உணவு
தமிழக சட்டசபை பேரவையில் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின் அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். அதன் முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது என்று ஏற்கனவே அறிவித்திருந்தார் .
முதலமைச்சர் தொடங்கிவைத்தார்
அதன் முதற்கட்ட நடவடிக்கையாக மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான இன்று முதல் 45 ஆயிரத்து 545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இத் திட்டம் தொடங்கப்படுகிறது.
இன்று காலை 8 மணிக்கு மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உணவு பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் .
ரூ.33.56 கோடி நிதி
அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் பிற மாவட்டங்களிலும் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது .
மேலும் மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது எனபது குறிப்பிடதக்கது.