பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல் - பதற வைக்கும் வீடியோ

Tamil nadu Viral Video Punjab
By Karthikraja Jan 24, 2025 10:09 AM GMT
Report

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கபடி போட்டி

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து 3 அணிகள் சென்றுள்ளது. 

tamilnadu kabaddi players attacked in pubjab

இந்நிலையில் இன்று(24.01.2025) மதர் தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. போட்டியினிடையே எதிர் அணியினர் மதர் தெரசா பல்கலைக்கழக அணி வீராங்கனை மீது பவுல் அட்டாக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வீராங்கனைகள் மீது தாக்குதல்

இது குறித்து கேள்வி எழுப்பிய வீராங்கனைகளை நடுவர் தாக்கியுள்ளார். இது குறித்து கேட்ட தமிழக அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் ஒரு வீராங்கனை மேடையில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளார். 

தமிழக வீராங்கனைகள் மீது நாற்காலிகளை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டதற்கு அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.