கடன் வாங்குவதிலும் தமிழ்நாடு முதலிடம் - ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியல்..!
இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலை ரிசர்வ் வ்ஙகி வெளியிட்டுள்ளது.
முதலிடம் பிடித்த தமிழ்நாடு
மாநிலங்கள் ரிசர்வ் வங்கி மூலம் சந்தைகளில் இருந்து கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுகின்றன. அதற்கான வட்டி சந்தை நிலவரப்படி நிர்ணயிக்கப்படுகிறது.
நிதிநிலை வலுவாக இருக்கும் மாநிலங்கள் குறைந்த வட்டியிலும், நிதிநிலை பலவீனமாக உள்ள மாநிலங்கள் அதை விட அதிக வட்டியிலும் கடன் பெறுகின்றன.

அந்த வகையில் கடந்த நிதி ஆண்டில் கடன் வாங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஆந்திர பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் அடுத்த இடங்களில் உள்ளன.
தமிழ்நாடு கடந்த நிதி ஆண்டில் 87 ஆயிரம் கோடி ரூபாய் மொத்த கடன் வாங்கி உள்ளது.
மகாராஷ்டிரா 72 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி 2வது இடத்தில் உள்ளது.
மேற்குவங்க மாநிலம் 63,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மூன்றாவது இடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆந்திர பிரதேசம் 57 ஆயிரத்து 478 கோடி ரூபாய் கடனுடன் நான்காவது இடத்திலும்,
உத்தரபிரதேசம் 55 ஆயிரத்து 612 கோடி கடனுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.