தமிழக முதலீடுகள் வெளியேறவில்லை - ஆதாரங்களை வெளியிட்ட அமைச்சர் கீர்த்தனா

Tamil nadu TVK
By Vinoja Jun 22, 2026 01:45 PM GMT
Report

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீடு தமிழகத்தை விட்டு சென்றுவிட்டதாக பரவிய தகவல்கள் தவறானவை என தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஆட்சிக்கு வந்த 40 நாட்களில் தமிழகத்திற்கு வந்த எந்த தொழில் முதலீடும் வேறு மாநிலங்களுக்கு செல்லவில்லை.

தமிழக முதலீடுகள் வெளியேறவில்லை - ஆதாரங்களை வெளியிட்ட அமைச்சர் கீர்த்தனா | Tamil Nadu Investments Not Moved To Andhra

ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் திட்டம் புதிய முதலீட்டு மாற்றம் அல்ல; ஏற்கனவே செயல்பட்டு வரும் அலுமினிய எக்ஸ்ட்ரூஷன் ஆலையின் விரிவாக்கத் திட்டம் மட்டுமே.

அமைச்சர் கீர்த்தனா உறுதி

இதுகுறித்து தமிழ்நாட்டுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தமிழகத்தில் இருந்து வெளியேறக்கூடிய நிலையில் இருந்த ஹூண்டாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் செயல்பாடுகள் தொடர்ந்து மாநிலத்திலேயே நீடிக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக முதலீடுகள் வெளியேறவில்லை - ஆதாரங்களை வெளியிட்ட அமைச்சர் கீர்த்தனா | Tamil Nadu Investments Not Moved To Andhra

மேலும் இரண்டு நிறுவனங்களுடன் புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், முந்தைய ஆட்சியில் ஊழல் மற்றும் தாமதம் காரணமாக சில முதலீடுகள் பாதிக்கப்பட்டதாகவும், அதனை தடுக்கும் வகையில் 21 நாட்களில் தொழில் அனுமதி வழங்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர்,

மேலும் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது நான்காவது ஆலையை தமிழகத்தில் அமைக்க உள்ளதாகவும், அப்பலோ டயர் உட்பட எந்த முக்கிய முதலீடும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை என்றும் அமைச்சர் கீர்த்தனா உறுதிபட தெரிவித்துள்ளார்.