LIVE: தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்
2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்.
தொடா்ந்து, இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தாக்கல் செய்யவுள்ளாா்.
முக்கிய அம்சங்கள்
புதுமைப் பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 5.40 லட்சம் மாணவர்களும் என ஒட்டுமொத்தமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 5.40 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
* போக்குவரத்துத் துறைக்கு ரூ. 13,062 கோடி நிதி ஒதுக்கீடு
* தமிழ்நாடு அரசின் மகளிர் விடியல் பேருந்து பயணத் திட்டத்துக்கு ரூ. 1,722 கோடி ஒதுக்கீடு
* மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு!
* உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
* ரூ.374 கோடியில் நதிக்கரை மேம்பாடுத் திட்டம்
* இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு
* பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு
* எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு
* மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு
* 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன்
முதல் இணைப்பு- பட்ஜெட் தாக்கல்
ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வரவிருப்பதால் இடைக்கால பட்ஜெட் மீது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதாவது, மக்களை கவரும் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள், சிறு வணிகா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும் திட்டங்கள் இடம்பெறலாம்.
ஏற்கனவே குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அதிகரிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துவிட்டார்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்த நிலையில், மாநில அரசே செயல்படுத்துவது குறித்தும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
