அரசுப் பள்ளிகளுக்கு தோல் கொடுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் - ஒரு நாள் ஊதியம் நன்கொடையாக அறிவிப்பு
நம்ம ஊர் பள்ளி (நம்ம ஸ்கூல் பவுண்டேசன்) திட்டத்திற்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
நம்ம ஊர் பள்ளி (நம்ம ஸ்கூல் பவுண்டேசன்) திட்டம்
கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்ம ஊர் பள்ளி (நம்ம ஸ்கூல் பவுண்டேசன்) திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தால் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும், இதற்கு தேவையான நிதியை வழங்கிடக் கோரியும் கோரிக்கை ஒன்றை முன் வைத்தார்.
இதற்காக தனது பங்களிப்பாக ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை நன்கொடையாக வழங்கினார். முதலமைச்சரின் இந்த கோரிக்கையை ஏற்று பல்வேறு அமைப்பினரும் தங்களது நிதி பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் நன்கொடை அறிவிப்பு
நம்ம ஊர் பள்ளி (நம்ம ஸ்கூல் பவுண்டேசன்) திட்டத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தினை வழங்கினர்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது மார்ச் மாத ஊதியதில் இருந்து ஒருநாள் ஊதியத்தை இந்த திட்டத்திற்காக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.