மீண்டும் தமிழகத்தை மிரட்டவரும் கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

warns chennai tamilnadu meteorology again heavy rains
By Swetha Subash Dec 06, 2021 08:21 AM GMT
Report

தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,

‘தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி, தென்காடு, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னதுடன் கூடிய கன மழை பெய்யும் எனவும்,

ஏனைய தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னளுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 8-ம் தேதி கூடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னதடன் கூடிய கன மழையும்,

கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னதுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிச.9, அரியதூார், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் தென் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னதுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வருகின்ற 10 ம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யாகூடும் அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை நிலவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.