மக்களே இந்த மாவட்டங்களில் கடும் மழை இருக்கு : சென்னை வானிலை ஆய்வு மையம்

tamilnadu haeavyrain meteorologicaldepartment
By Irumporai Aug 25, 2021 07:05 AM GMT
Report

தமிழகத்தில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்காக பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கடும் கனமழை பெய்து வருகிறது.

இந்த கடும் கனமழை இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என்றும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று தமிழகத்தில்நீலகிரி, திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் வரும் ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.