தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது; வஞ்சிக்கும் பாஜக அரசு - மு.க.ஸ்டாலின்!

M K Stalin Tamil nadu DMK Michaung Cyclone
By Jiyath Apr 28, 2024 02:48 AM GMT
Report

பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நிதி ஒதுக்கீடு

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது; வஞ்சிக்கும் பாஜக அரசு - மு.க.ஸ்டாலின்! | Tamil Nadu Has No Funds And No Justice Mk Stalin

அதேபோல் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.397 கோடி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. மொத்தம் ரூ. 682 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் நிதியில் இருந்து ரூ.115.45 கோடியும், ரூ.397 கோடி வெள்ள பாதிப்பு நிதியில் இருந்து ரூ.160.61 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றாந்தாய் மனப்பான்மை; தமிழக மக்கள் மீது கருணை காட்டாத மோடி - செல்வப்பெருந்தகை!

மாற்றாந்தாய் மனப்பான்மை; தமிழக மக்கள் மீது கருணை காட்டாத மோடி - செல்வப்பெருந்தகை!

மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது; வஞ்சிக்கும் பாஜக அரசு - மு.க.ஸ்டாலின்! | Tamil Nadu Has No Funds And No Justice Mk Stalin

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய்.

இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.