மாணவர்களுக்கு சூப்பரான தகவல்: முன்கூட்டியே விடப்படும் விடுமுறை
தமிழக அரசு ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்களின் முழுஆண்டு தேதியை கோடை வெப்பத்தின் காரணமாக மாற்றியுள்ளது.
சுட்டெரிக்கும் வெயில்
தற்போது கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக் குழந்தைகளும் வெப்பத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த வாரத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் பிரைமரி வகுப்புகளான ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாக முழுஆண்டு தேர்வின் தேதியை மாற்றியமைத்துள்ளது.
குஷியில் மாணவர்கள்
மார்ச் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ள நிலையில், ஏப்ரல் மாதம் இன்னும் மோசமாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது வெளியான அறிவிப்பின் படி, ஏப்ரல் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை தேர்வு நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக முதலமைச்சல் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மனேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலில் இந்த தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.