தமிழகத்தின் ஆளுநர் அண்ணாமலையா? ரவியா? - கொந்தளித்த அமைச்சர் ரகுபதி
தமிழகத்தின் ஆளுநர் அண்ணாமலையா? ரவியா? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசு முடிவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில இன்று மாலை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை நிறைவேற்றாமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக்கு பிறகு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் பேரவை கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்து மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் ஆளுநர் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லியிருப்பது ஏற்புடையது அல்ல.
இரண்டாவது முறையாக ஆன்லைன் தடைச் சட்டத்தை கொண்டு வரும் போது திருப்பி அனுப்ப முடியாது. பொதுமக்களை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது.
ஆளுநர் அண்ணாமலையா? ரவியா?
தமிழகத்தின் ஆளுநர் அண்ணாமலையா? ரவியா? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் கேட்ட விவரத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் ரகுபதி ஆளுநர் எங்களிடம் என்ன விளக்கம் கேட்டார் என்று தெரியுமா?
அண்ணாமலையிடம் ஆளுநர் எங்களிடம் கேட்ட விளக்கங்களை சொன்னாரா? இந்த ரகசியங்களை எல்லாம் கூப்பிட்டு ஆளுநர் மாளிகையில் அண்ணாமலையுடன் டிஸ்கஸ் பண்ணுகிறாரா? என கேள்வி எழுப்பினார்.