தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு - டெல்லி செல்லும் ஆளுநர்

Amit Shah Governor of Tamil Nadu Delhi
By Thahir 2 மாதங்கள் முன்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி செல்லும் ஆளுநர் 

கோவையில் கடந்த 22ம் தேதி பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகள், இந்து முன்னணியினர் அமைப்பினர் வீடுகள், கார், வர்த்தக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு - டெல்லி செல்லும் ஆளுநர் | Tamil Nadu Governor Goes To Delhi

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்ல இருக்கிறார். டெல்லி செல்லும் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மாலை சென்னையிலிருந்து டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் 4 நாட்கள் தங்கி இருப்பார் என்றும் 30ம் தேதி தமிழகம் திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கலந்துரையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.