100 நாட்கள்: விரைவில் வெளியாகும் தவெக அரசின் சாதனை பட்டியல்
தவெக அரசு பதவியேற்று 100 நாட்கள் கடந்த நிலையில் அனைத்து துறைகளிலும் சாதனை பட்டியலை தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளை வென்று ஆட்சியமைத்தது தவெக. காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள தவெக அரசு 100 நாட்களை கடந்துள்ளது.
பொறுப்பேற்ற நாள் அன்றே 200 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்தது, தொடர்ந்து சிங்கப்பெண் சிறப்பு படை, 717 டாஸ்மாக் கடைகள் மூடல் உட்பட சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒவ்வொரு துறையிலும் சாதனை பட்டியலை தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி அந்தந்த துறை அதிகாரிகள் பட்டியலை தயார் செய்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தலைமை செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கடல் அலையை தாண்டி ஒலித்த மாணவர்களின் கால் சலங்கை ஓசை IBC Tamil