அரசுப்பள்ளிகளுக்கு இதைச் செய்யும் ஆற்றல் தமிழக அரசுக்கு உண்டு - கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்வெளியிட்டுள்ள அறிக்கையில்: பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்து இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேரும் வாய்ப்பு உண்டு என கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.
அதற்கேற்ப 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 15% வரை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
ஆகவே அரசு பள்ளிகளில் தரமான நூலகங்கள், ஆய்வகங்கள், காற்றோட்டமான வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், சுத்தமான கழிப்பறை, ஆரோக்கியமான மதிய உணவு, நவீன விளையாட்டு உபகரணங்கள் என தனியார் பள்ளிகளை விட பன்மடங்கு மேம்பட்டதாக மாற்ற முடியும்.
தமிழக அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றல் உண்டு என நான் நம்புவதாக கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில், பல்வேறு காரணங்களால் மக்கள் அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்து வந்தார்கள். இன்று சூழல் மாறி மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள். இதற்கேற்ப பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். pic.twitter.com/DDyr5VCYkW
— Kamal Haasan (@ikamalhaasan) June 17, 2021