வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் : தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி : பீகார் அதிகாரிகள்
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு திருப்திகரமாக இருந்ததாக தமிழகம் வந்த பீகார் சிறப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்தி பரவி தமிழகத்தில் பதட்டமான சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் இவ்வாரு வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றது
பீகார் ஆய்வு குழு
இந்நிலையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவின் பெயரில், பீகார் மாநில அரசு அதிகாரிகள் தமிழகம் வந்து திருப்பூர், கோவை, சென்னையில் உள்ள வடமாநிலத்தவர்களிடமும், அங்குள்ள தொழிற்சாலை நிறுவன அதிகாரிகளுடனும் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
அதனை அடுத்து , இன்று சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பீகார் குழு அதிகாரிகள் பேட்டியளித்தனர்.
தொழிலாளர்கள் நலம்
அதில், திருப்பூர், கோவை, சென்னையில் உள்ள அரசு உயர் அதிகாரிகளிடம் தற்போது உள்ள நிலை குறித்து கேட்டறிந்தோம், தொழிற்சாலையில் உள்ள நிர்வாகிகளிடம் தொழிலாளர்களின் நிலை குறித்து கேட்டறிந்தோம்.
அதே போல, பீகார் தொழிலாளர்கள் பலரிடம் அவர்களின் கருத்துக்களையும், தற்போது உள்ள நிலை குறித்தும் கேட்டறிந்தோம். வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு திருப்திகரமாக இருந்தது என பீகார் குழு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.